×

டெல்லி பர்கர் கிங் கொலை 19 வயது பெண் தாதா கைது: நேபாளம் தப்ப முயன்ற போது உபியில் மடக்கியது போலீஸ்

புதுடெல்லி: டெல்லி பர்கர் கிங் உணவகத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 19 வயது பெண் தாதா கைது செய்யப்பட்டார். டெல்லி, ரஜோரி கார்டன் பகுதியில் பிரபலமான பர்கர் கிங் உணவகத்தில், கடந்த ஜூன்18ம் தேதி அரியானா மாநிலத்தை சேர்ந்த அமன் ஜூன் (28) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், அமன்ஜூனை அழைத்து வந்த இளம்பெண், தாதா செயல்பட்டது உறுதியானது. இந்த கொலை சதிக்கு அவரே முளையாக செயல்பட்டு, போர்ச்சுக்கல்லில் இருந்து செயல்படும் பிரபல தாதா ஹுமான்ஷி பாவ் மற்றும் சாகில் ரிடேலியாக்கு தகவல் கொடுத்துள்ளார். பெண் தாதாவை போலீசார் தேடி வந்த நிலையில், அவரை இந்திய – நேபாள எல்லையான உத்தர பிரதேச மாநிலம், லக்கிபூரில் கைது செய்தனர். அவர் பெயர் அனு தங்கர். வயது 19. அரியானா மாநிலம் ரோத்தக் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. உபி மாநிலம் லக்கிம்பூர் கெரியிலிருந்து நேபாளத்திற்குச் செல்ன்று அங்கிருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்ல முயன்ற போது உபி எல்லையில் அவர் ​​டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

* அமெரிக்கா விசா ஆடம்பர வாழ்க்கை
அமனை காதலிப்பது போல் நடித்து தனியாக அழைத்து வந்தால், அமெரிக்காவில் குடியேறுவதற்கு தேவையான விசா, ஆடம்பர வாழ்கைக்கு தேவையான பண உதவி செய்து தருவதாக பெண் தாதா அனு தங்கருக்கு, பிரபல தாதா ஹுமான்ஷி பாவ் வாக்குறுதி அளித்துள்ளார்.

The post டெல்லி பர்கர் கிங் கொலை 19 வயது பெண் தாதா கைது: நேபாளம் தப்ப முயன்ற போது உபியில் மடக்கியது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Burger King ,Dada ,Nepal ,New Delhi ,Rajouri Garden, Delhi, ,Aman June ,Ariana ,
× RELATED அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட பிரபல...