×

விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 21வது கால்நடை கணக்கெடுப்பு துவங்கியது. விருதுநகர் நகராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். கலெக்டர் கூறுகையில், இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு வருகிறது. 2019ல் 20வது கால்நடை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. தற்போது 2024ல் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு பணிகள் அக்.2024 முதல் பிப்.2025 வரை நடைபெறும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களில் கிராமவாரியாக மற்றும் நகர்புறங்களில் வார்டு வாரியாக கால்நடை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும்.  கால்நடைகள் இருக்கிற மற்றும் இல்லாத அனைத்து வீடுகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள், இறைச்சி மற்றும் முட்டைக்கோழி பண்ணைகள், வழிபாட்டுதலங்கள், கோசாலைகளில் கணக்கெடுப்பு தகவல்கள் சேகரிக்கப்படும்.

கணக்கெடுப்பு பணியில் 207 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 46 மேற்பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பில், கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார் எண், செல்போன் எண், நில அளவு, முக்கிய தொழில், கல்வித்தகுதி கால்நடைகளின் எண்ணி க்கை, இனம், வயது, பாலினம், பயன்பாடு குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுப்பு விரைவாக நடத்தப்பட உள்ளதால், வீடு தேடி வரும் கால்நடை மற்றும் புள்ளி விவர அலுவலர்களுக்கு தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார். நிகழ்வில் கால்நடைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar District ,Virudhunagar ,Survey ,Collector ,Jayaseelan ,21st Veterinary Survey ,Department of Veterinary Care ,Virudhunagar Municipality ,India ,Dinakaran ,
× RELATED சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக சேரலாம்