×
Saravana Stores

அவதூறு பரப்பிய விவகாரம் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி எடப்பாடி மீது தி.மு.க. வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: அவதூறாக பேசிய விவகாரத்தில் எடப்பாடியிடம் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை டெல்லி போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் திமுகவுடன் ஜாபர் சாதிக்கை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதால் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக்கோரி திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை திமுகவின் வெளிநாடுவாழ் இந்தியர் அணியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி விட்டோம்.

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துகளை பதிவு செய்ய எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும். அவரது பதிவுகளை நீக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

The post அவதூறு பரப்பிய விவகாரம் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி எடப்பாடி மீது தி.மு.க. வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Edappadi ,Chennai ,Chennai High Court ,Delhi Police ,Zafar Sadiq ,Dinakaran ,
× RELATED அதிமுகவுடன் யாரும் கூட்டணி சேர தயாராக...