×
Saravana Stores

க.பரமத்தி அருகே வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாய பணிகள் மும்முரம்

க.பரமத்தி : க.பரமத்தி அருகே அஞ்சூர் சுற்று பகுதியில் பருவ மழையை நம்பி விவசாய பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது.கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சி கிராம பகுதிகளிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆடிப்பட்டம் தேடி விதைத்து அமோகமாக விளைச்சல் செய்து விவசாயிகள் லாபம் கண்டனர்.

கடந்த ஆண்டில் போதிய மழை இல்லாததால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலையில், விவசாய இழப்பீடுகள் குறித்த அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் இந்தாண்டு கடந்த மாதம் முதல் அவ்வப்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பருவ மழையை நம்பி அஞ்சூர் ஊராட்சி பாண்டியலிங்கபுரம், குப்பகவுண்டன்வலசு, பில்லாபாளையம், கருவேயம்பாளையம் ஆகிய பகுதி விவசாயிகள் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத் திட்டம் (எல்எல்பி) வாய்க்காலில் வரும் நீரை நம்பி அந்த பகுதியில் ஐஆர் 20, பிபிடி5204, ஆந்திராபொன்னி ஆகிய ரக நெல்நாற்று நடவு பணிகளை விவசாயிகள் பலர் துவங்கியுள்ளனர். மழை அதிகமாக பெய்து விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டும் என வருண பகவானை விவசாயிகள் நம்பியுள்ளனர்.

The post க.பரமத்தி அருகே வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாய பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Paramathi ,Paramathi Town ,Anjur ,Karur district ,North East Monsoon ,K. Paramathi ,Dinakaran ,
× RELATED நிலக்கடலை ஏலத்தில் விலை உயர்வு: அதிக பட்சமாக கிலோ ரூ.78க்கு விற்பனை