×
Saravana Stores

திருப்பதி லட்டு விவகாரம்; பவன் கல்யாண் நவ. 22ல் கோர்ட்டில் ஆஜராக சம்மன்

திருமலை: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக கூறி, எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக தெலங்கானா மாநிலம், ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கறிஞர் இம்மனேனி ராமாராவ் என்பவர் கடந்த 14ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

அதில் திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து விரிவான விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே ஒரு தனி குழுவை அமைத்துள்ளது. திருப்பதி பிரசாதம் குறித்து பவன் கல்யாண் மீண்டும் ஒருமுறை இதுபோன்ற கருத்துகள் கூறுவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ராமாராவ் மனுவில் கோரியிருந்தார். இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், வரும் நவம்பர் 22ம் தேதி நேரில் ஆஜராக பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

The post திருப்பதி லட்டு விவகாரம்; பவன் கல்யாண் நவ. 22ல் கோர்ட்டில் ஆஜராக சம்மன் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Pawan Kalyan ,Tirumala ,Andhra State ,Deputy ,Chief Minister ,Hyderabad City Civil Court of Telangana ,Lattu Prasad ,Tirupati Eyumalayan temple ,Lattu ,
× RELATED திருப்பதியில் தரிசன நேரம் குறைக்க ஏஐ...