×

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

 

மயிலாடுதுறை, அக்.22: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அக்டோபர்-2024 மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, தலைமையில் வருகிற 25.10.2024 அன்று காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று வேளாண்மை, நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Mahabharathi ,
× RELATED மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில்...