×
Saravana Stores

நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க ‘கிரீன் சிக்னல்’: சுற்றுலாப்பயணிகள் குஷி

பெரியகுளம்: நீர்வரத்து சீரானதால், கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கும்பக்கரை அருவி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுகளில் மழை பெய்யும் நேரங்களில் இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும். விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் களைகட்டும். தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்து நீராடி மகிழ்வர்.

இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால், கடந்த 7 நாட்களாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிப் பகுதிக்கு செல்லவும், அருவியில் குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அருவியில் நேற்று நீர்வரத்து சீரானது. இதனால், நேற்று முதல் அருவியில் குளிக்கலாம் என தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அதிகாரி அன்பழகன் தெரிவித்துள்ளார். இதனால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க ‘கிரீன் சிக்னல்’: சுற்றுலாப்பயணிகள் குஷி appeared first on Dinakaran.

Tags : Kumbakar Barrel ,Kushi ,Beriyakulam ,Kumbakarai lake ,Theni District ,Peryakulam ,Kumbakarai ,Western Highlands ,Kumpakkari lake ,
× RELATED அர்ஜுன் தாஸ் அதிதி ஷங்கர் நடிக்கும் ஒன்ஸ்மோர்