×
Saravana Stores

சென்னையில் பெய்த கனமழையில் 59 குளங்கள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிக்கை!

சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையில் 59 குளங்கள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைநீரை சேகரிக்கின்ற வகையிலும், நீர்நிலைகளை மேம்படுத்தும் வகையிலும் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை புனரமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பெய்த கனமழையின் காரணமாக 59 குளங்கள் அதன் முழு நீர்தேக்கும் திறனை அடைந்து, நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

இதில், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட தாமரைக்குளம். மணலி மண்டலத்திற்குட்பட்ட எலந்தனூர் குளம், பர்மா நகர் குளம், ஆண்டார்குப்பம் கிராமக் குளம், ஆண்டார்குப்பம் மயானபூமி குளம், குளக்கரை குளம், கன்னியம்மன்பேட்டை குளம், காமராஜபுரம் குளம், வடபெரும்பாக்கம் குளம், விநாயகபுரம் மயானபூமி குளம், வடபெரும்பாக்கம் சாமுவேல் நகர் மயானபூமி குளம், கதகுளி மயானபூமி குளம், கொசப்பூர் ஸ்ரீ வேம்புலியம்மன் கோயில் குளம், கொசப்பூர் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் குளம், தீயம்பாக்கம் குளம், தீயம்பாக்கம் காந்திநகர் குளம், சின்னத் தோப்பு குளம், செட்டிமேடு குளம், ஓமக்குளம்.

ஜலகண்டமாரியம்மன் கோயில் தெரு குளம், ராமலிங்கபுரம் தேவராஜ் தெரு குளம், மாசிலாமணி நகர் குளம், ராமலிங்கசாமி கோயில் குளம், மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட தாமரைக்குளம், பேசின் ஏரி, முள்ள குளம், செல்லக் குளம், இதயன் குளம், அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட வைரக்குளம், சிவாவிஷ்ணு குளம், கொரட்டூர் தாங்கல் குளம், மீனாம்பேடு தாங்கல் குளம், கங்கையம்மன் குளம், அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பரசுராமர் கோயில் குளம், காசி விஸ்வநாதர் கோயில் குளம், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட அகத்தீஸ்வரர் கோயில் குளம், கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பாஸ்கர் காலனி குளம், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட மருதீஸ்வரர் கோயில் குளம், பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட ஊத்துக் குளம், வண்ணான் குளம், ஜல்லடியான்பேட்டை குளம்.

சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட வண்ணகேணி மற்றும் தட்சன் கேணி குளம், அலிலாதீஸ்வரர் கோயில் குளம், புறா குளம், புல்லா கேணி, அனுமன் காலனி, தான்தோன்றியம்மன் கோயில் குளம், நாட்டுப் பன்னை குளம், சோலிமா கார்டன் குளம், பெடரியம்மன் கோயில் குளம், வல்வேட்டி தாங்கல் ஏரி, தெற்கு எல்லை பேட்டை குளம், சாராயக் குளம். ரெட்டைக் குட்டை தாங்கல் குளம், ராமன் தாங்கல் ஏரி. புதுச்சேரி குளம், கங்கையம்மன் கோயில் குளம், கனகன்மேனியா குளம், பெரிய கேணி குளம் உள்ளிட்ட 59 குளங்களில் மழைநீர் நிறைந்து காணப்படுகிறது. தற்போது குளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் புத்துயிர் காரணமாக குளங்களின் சேமிப்புத் திறன் அதிகரிக்கப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயரும் நிலை உருவாகியுள்ளது.

 

The post சென்னையில் பெய்த கனமழையில் 59 குளங்கள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிக்கை! appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Corporation ,Chennai ,
× RELATED சென்னையில் பெய்த கனமழையில் 59 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியது!!