×

53 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி

 

புதுக்கோட்டை,அக்.18: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 1.7.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்கிறது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மன்றம் சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவுது:

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு அலுவலர்களுக்கு தீபாவளி பரிசாக 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 1.7.2024 முதல் 53 சதவீதம் என 3 சதம் அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்புச் செய்துள்ளவற்றை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரும் மகிழ்வோடு பெரிதும் வரவேற்று பெரும் நன்றி பாராட்டுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் அனைத்து வகை ஆசிரியர்- அரசு அலுவலர்களின் எதிர்பார்ப்புகளையும் – கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றித்தந்து உதவிட வேண்டுமாய் எங்களது மாநில அமைப்பு பெரிதும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கெள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 53 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Primary School Teachers Association ,Tamil Nadu ,Chief Minister ,Pudukottai ,Tamil Nadu Primary School Teachers' Association ,M.K.Stal ,Tamil Nadu Primary School Teacher ,Tamil Nadu Primary School Teachers Forum ,Tamil ,Nadu ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...