×
Saravana Stores

பழையூரில் ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் எதிர்ப்பு

திருப்புவனம், அக். 19: திருப்புவனம் பேரூராட்சி பழையூரில் யானைசாலை ஊரணி உள்ளது. இந்த ஊரணி கரையை சுற்றியிருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் கணேஷ், திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மின்வாரிய உதவி பொறியாளர், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் குடும்பத்துடன் நரிக்குடி ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊருணிக்கரையில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும். அதன்பின் ஆக்கிரமிப்பை தாங்களே அகற்றி விடுவதாக கூறி ஆக்கிரமிப்புப் பணியை நிறுத்திவைத்துள்ளனர்.

The post பழையூரில் ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mauiur ,Turupwanam ,Tirupwanam ,Malaiur ,
× RELATED குழாய் பதிக்கும் பணியில் உருவான பள்ளத்தால் அவதி