×

சோத்துப்பாறை அணையில் ஆய்வு

 

பெரியகுளம், அக்.17:பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரையில் உள்ள வராக நதி ஆற்றங்கரையோர பகுதி, மற்றும் வடகரை பகுதியில் ஸ்டேட் பேங்க் காலனி பகுதிகளை சமூக நலத்துறை ஆணையரும் தேனி மாவட்ட பேரிடர் கண்காணிப்பாளர் லில்லி ஐஏஎஸ், மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் நீர் வெளியேற்றம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், அணையின் சுரங்க பாதையில் உள்ள நீர் கசிவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் கனமழை பெய்து வருவதால் வராக நதி ஆற்று கரையோரத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களை தங்க வைப்பது குறித்தும், தனியார் திருமண மண்டபம் மற்றும் பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கான இடம் ஒதுக்கீடு உள்ளிட்டவைகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.

The post சோத்துப்பாறை அணையில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sothupparai Dam ,Periyakulam ,Theni ,Lilly IAS ,Varaha ,State Bank Colony ,Theni district ,Dinakaran ,
× RELATED தேனி நகரில் காலியிடத்தில் குப்பையில்...