×
Saravana Stores

மழைநீர் குளம் பிளாஸ்டிக் கழிவுகளால் மூடல்

*ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும்

*குப்பைகளை உரமாக்க வலியுறுத்தல்

மண்டபம் : மண்டபம் ஒன்றியம் காரான் ஊராட்சியில் காரன் கிராம பகுதியில் அமைந்துள்ள மழைநீர் தேக்க குளத்தை வீடுகளில் ஊராட்சி நிர்வாகம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் உள்பட கழிவு குப்பைகளை கொட்டி மூடப்பட்டு வருவதை தடுத்து அந்த குளத்தை ஆழப்படுத்தியும், ,அகலப்படுத்தியும் சீரமைத்து தீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்டபம் ஒன்றியம் காரன் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் முன்பு சாலை ஓரத்தில், மழை நீர் தேக்கும் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக குளிப்பதற்கும், கோயில் விசேஷ காலங்களில் கோயிலுக்கு தேவையான தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இந்த குளத்தின் அருகே, கிராமங்களில் வீடு தோறும் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் குப்பைகளை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி தீ வைத்தும், அந்த கழிவுகளை குளத்தில் போட்டு மூடப்பட்டும் வருகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளம் பரந்த நிலப்பரப்பில் பெரிய குளமாக காணப்பட்டது. நாளடைவில் குப்பைகளை கொட்டி கொட்டி குளத்தின் அளவு குறைந்து விட்டது. மேலும் இந்த குளத்தை பெரிய அளவில் அகலப்படுத்தியும், ஆழப்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கும் பட்சத்தில் அதிகமான மழை நீர்தேக்கம் அடையும்.

இந்த மழை நீரை அருகேயுள்ள விவசாயிகளுக்கும் பயன்படுத்த உதவும். அதுபோல அந்த பகுதியில் பொதுமக்கள் இயற்கையாக அன்றாடம் குளிப்பதற்கும், சுகாதாரமாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த குளத்தை சுற்றி கொட்டப்படும் கழிவு குப்பைகளை அப்புறப்படுத்தி, அதுபோல குளத்தை சுற்றி வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.மேலும் பல ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் ஆழப்படுத்தி சுற்றுச்சுவர் அமைத்து மழைநீரை சேமித்து குளத்தை பாதுகாத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரான் ஊராட்சியில் வசித்து வரும் மக்களின் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவு, குப்பைகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவு குப்பை உட்பட அனைத்து குப்பைகளையும் சேகரிக்கப்பட்டு ஊராட்சிக்கு சொந்தமான கிராமப் பகுதியில் இருந்து வெளிப்பகுதியில் கொட்ட வேண்டும்.

ஊராட்சிகளில் குப்பைகளை உரமாக்கும் திட்டப்பணிகள் ஏதேனும் இருந்தால், அதற்கு முறையாக மக்கும் குப்பை மக்கா குப்பைகளாக பிரித்து எடுக்க வேண்டும். மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்க பயன் படுத்த வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் போன்ற மக்கா குப்பைகளை மறு சுழற்ச்சி செய்து தார்ச்சாலைகள் அமைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

அதுபோல குப்பைகளை உரமாக்கும் திட்ட பணிகள் உள்ள இயந்திரங்கள் இல்லை என்றால், அருகேயுள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஊராட்சி மன்றங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை அங்கு சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது ஊராட்சி நிர்வாகம் குளத்துப் பகுதியில் கொட்டி குளத்தை மூடி வருகிறது. அதுபோல சில நேரங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்கள் உள்பட கழிவு பொருட்களை தீ வைத்து அழிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல மாசுபட்டு வருகிறது.

விவசாயம் அமைந்துள்ள காரான் பகுதியில் தேவையற்ற சுற்றுச்சூழலை விளைவிக்கும் பகுதியாக உருவாகிறது. கழிவுப் பொருட்களை தீ வைப்பதால், விவசாயிகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தீ வைக்கும் முறையை ஊராட்சி நிர்வாகம் கைவிட்டு மறு சுழற்சி செய்து விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post மழைநீர் குளம் பிளாஸ்டிக் கழிவுகளால் மூடல் appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Mandapam Union Karan Panchayat ,Karan ,Panchayat administration ,Dinakaran ,
× RELATED நகையை பறித்துக்கொண்டு மூதாட்டி அடித்து கொலை உறவினர்கள் சாலை மறியல்