×
Saravana Stores

குருவாயூர் கோயிலில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் தேவஸ்தான தலைவர் துவங்கி வைத்தார்

 

பாலக்காடு, அக். 10: குருவாயூர் கோயில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு எந்நேரமும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை தேவஸ்தான தலைவர் டாக்டர் வி.கே.விஜயன் துவங்கி வைத்தார். கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயில் அருகே தீர்த்தக்குளத்தில் 15 லட்சம் ரூபாய் செலவீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு புதிய பிளான்ட் அமைக்கப்பட்டது. இந்த பிளான்ட்டில் மணிக்கூருக்கு 5 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க முடியும். தினம் 25 ஆயிரம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

தேவஸ்தான நிர்வாகக்குழு உறுப்பினர் மனோஜ், விஸ்வநாதன், ரவீந்தரன், நிர்வாகி கே.பி விநயன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புதிய பிளான்ட் அமைப்பு அனைத்துமே தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தேவஸ்தான எலக்ட்ரிக்கல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை செயல்படுகிறது. குருவாயூர் கோயில் தீர்த்தக்குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் சுத்திகரிப்பு பிளான்ட்டை தேவஸ்தான தலைவர் டாக்டர் வி.கே.விஜயன் ‘சுவிட்ச் ஆன்’ செய்து துவங்கி வைத்தார். இதனால் தினமும் குருவாயூர் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயனடைவர் என தேவஸ்தான நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

The post குருவாயூர் கோயிலில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் தேவஸ்தான தலைவர் துவங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Devasthanam ,Guruvayur ,Palakkad ,Devasthan ,President Dr. ,VK Vijayan ,Guruvayur temple ,Tirthakulam ,Kerala ,
× RELATED திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை