×

மது ஒழிப்பு மாநாடு விசிக நன்றி அறிவிப்பு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பை ஏற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது-போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டிற்கு திரண்டுவந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

இம்மாநாட்டிற்கு தங்களது கட்சியின் பிரதிநிதிகளை அனுப்பி வைத்த திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தோழமை கட்சியின் தலைவர்களுக்கும் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். மாநாட்டில் பங்கேற்று உரையாற்றி ஊக்கப்படுத்திய பாலபிரஜாபதி அடிகளாருக்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழ்நாடு அரசு க்கும், காவல்துறைக்கும் நன்றிகளை தெரிவிக்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post மது ஒழிப்பு மாநாடு விசிக நன்றி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Alcohol Abolition Conference ,Chennai ,Liberation Leopards Party ,Deputy General Secretary ,S. S. ,Balaji MLA ,Thirumavalavan ,Alcohol-Drug Abolition Women's Conference ,Ulundurpet ,
× RELATED விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த 5 பேர்...