×

இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அடையாளப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அதிரடி

டெல்லி : இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அடையாளப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சை கருத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அடையாளப்படுத்தக் கூடாது, அப்படி அழைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அது தேசத்தின் ஒற்றுமைக்கு எதிரானது. பாலினம் சார்ந்த கருத்துகளை ஒரு சாதாரண கண்ணோட்டத்தில் வெளியிடும்போது அது சமூகத்தில் ஆணாதிக்க, பெண் வெறுப்புக் கருத்தாக பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது எனவே, அதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதில் சமூக ஊடகங்கள் அதிக பங்கு வகிக்கும் பட்சத்தில் நீதிபதிகளின் கருத்துக்கள் நீதிமன்றத்தின் மாண்புடன் ஒத்துப்போக வேண்டியது அவசியம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அடையாளப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அதிரடி appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Supreme Court ,Delhi ,Chief Justice Chandrasuet ,Karnataka High Court ,
× RELATED சர்ச்சை குறித்து அறிக்கை கேட்கிறது...