×

கருங்குழி ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் புரட்டாசி பவுர்ணமி, சத்யநாராயண பூஜை

மதுராந்தகம்: கருங்குழி ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் புரட்டாசி மாத பவுர்ணமி மற்றும் சத்யநாராயண பூஜை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் புரட்டாசி மாதம் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவனத்தில் சித்தர் யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 125வது பவுர்ணமி தரிசனம் விழா கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மேலும், பகல் 12 மணிக்கு சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனைவுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசி பெற்றனர்.

இதனை தொடர்ந்து, மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்திய நாராயண பூஜையும் செய்து மகாதீப ஆராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார். இந்நிகழ்வில், சென்னை உதவி காவல் ஆணையர் ராஜபாண்டி, மதுராந்தகம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், கருங்குழி மட்டுமின்றி செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி, பெங்களுரு, கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சித்தரிடம் அருளாசி பெற்றனர். நிகழ்ச்சியை யோகி ரகோத்தமா சுவாமிகள் அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் ஏற்பாடு செய்ந்திருந்தனர்.

The post கருங்குழி ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் புரட்டாசி பவுர்ணமி, சத்யநாராயண பூஜை appeared first on Dinakaran.

Tags : Puratasi Poornami ,Satyanarayana ,Karunkuzhi Raghavendra Swami ,Brindavan ,Madhurantagam ,Puratasi Month Poornami ,Satyanarayana Puja ,Chengalpattu district ,Madurandakam ,Brindavan Puratasi ,Purtasi ,
× RELATED கடையம் அருகே தோரணமலையில் பவுர்ணமி கிரிவலம்