- Thiruvaiyar
- திருவையாறு
- தமிழ்நாடு அரசு மாநில திட்டக்குழு
- துணைத்தலைவர்
- ஜெயரஞ்சன்
- தமிழ்நாடு அரசு
- திருப்பழனம் ஊராட்சி
- திருப்பழனம் ஊராட்சி
- திருவையாறு மாநில திட்டக்குழு
திருவையாறு,மே21: திருவையாறு அருகே திருப்பழனம் ஊராட்சியில் தமிழக அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை தமிழ்நாடு அரசு மாநில திட்ட குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் ஆய்வு செய்தார். திருப்பழனம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று தமிழக அரசின் நலத்திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா? தங்களுக்கு கிடைக்காத நலத்திட்டங்கள் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு மாநில திட்ட குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவரிடம் திருப்பழனம் ஊராட்சி சார்பில் தொகுப்பு வீடுகள், மேலத்தெரு பகுதிக்கு சமுதாய கூடம், திருவையாறு நகராட்சியில் திருப்பழனம் ஊராட்சியை சேர்க்ககூடாது என்பது உள்ளிட்ட பல் கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆய்வின் போது கடலூர் புள்ளியல் துறை மண்டல இணை இயக்குனர் சுந்தர்ராஜன், மாவட்ட புள்ளியியல் இயக்குனர் செல்வம், உதவி இயக்குனர் பாஸ்கரன், திருப்பழனம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா பிரபாகரன் மற்றும் புள்ளியல்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.
The post திருவையாறில் அரசு திட்டப்பணிகள் மாநில திட்டக்குழு துணைத் தலைவா் ஆய்வு appeared first on Dinakaran.