×

பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்

 

பொன்னமராவதி, மே 4: பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர;வு முகாம் நடந்தது. பொன்னமராவதி வட்டத்தில் உள்ள செம்பூதி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை உதவி மருத்துவர் பிரேம்குமார் பங்கேற்று கால்நடைகளை பராமரிப்பது பற்றியும் எந்த வித நோய்கள் வராமல் கட்டுப்படுத்துவது பற்றியும் கூறினார்.

மேலும் அங்குள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது மற்றும் மாட்டுக்கு சத்துணவு தீவனம் வழங்கப்பட்டது. இதில் புஸ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் ரித்திகா, ரித்திஸ்ரீ சரஸ்வதி, சர்மிளா, சிவப்பிரியா, ஸோபிகா, சிந்து, சிவரஞ்சனி, சினேகா, சுபபாரதி, சுபாசினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Sembhuti ,Ponnamaravati ,Agriculture College ,Veterinary Assistant ,Doctor ,Premkumar ,
× RELATED பொன்னமராவதி அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்