×

பிளே ஆப் வாய்பை தக்க வைக்க கொல்கத்தாவை வெல்லுமா மும்பை

மும்பை: ஐபிஎல் டி20 போட்டியின் 51வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான மும்பை புதுக் கேப்டன் ஹர்திக் பாண்டிய தலைமையில் தட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறது. உலக கோப்பைக்கு தேர்வான பலர் மும்பை அணி வீரர்கள். அப்படி அதிமுக்கிய வீரர்கள் இருந்தும் மும்பை இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி டெல்லி, பெங்களூர், பஞ்சாப் அணிகளை மட்டுமே வென்றுள்ளது.

அதே நேரத்தில் குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான்(2முறை), சென்னை, டெல்லி, லக்னோ ஆகிய அணிகளிடம் 7 தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் எஞ்சிய ஆட்டங்களிலும் வென்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகள்தான் மும்பைக்கு பிளே ஆப் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். அதேநேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா 9 ஆட்டங்களில் களமிறங்கி ஐதராபாத், பெங்களூர்(2முறை), டெல்லி(2முறை), லக்னோ அணிகளை வீழ்த்தி 6 வெற்றிகளை பெற்றுள்ளது.

கூடவே சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் என 3 அணிகளிடம் நூலிழையில் வெற்றி வாய்ப்பையும் இழந்துள்ளது. எஞ்சிய ஆட்டங்களில் வெல்வது கொல்கத்தாவுக்கு, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதை எளிதாக்கும். அதனால் மும்பைக்கு, வலுவான அணியான கொல்கத்தா பெரும் சவாலாக இருக்கும். உலக கோப்பைக்கான அணி வீரர்கள் அதிகம் இருக்கும் அணி என்பதால், அந்த தேர்வுக்கு நியாயம் செய்ய மும்பையும் வெற்றிக்காக போராடும். அதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

நேருக்கு நேர்

* இந்த அணிகள் மோதிய 32 ஆட்டங்களில் மும்பை 23, கொல்கத்தா 9 ஆட்டங்களிலும் வென்று உள்ளன.

* இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் கொல்கத்தா 3, மும்பை 2 ஆட்டங்களில் வெற்றிப் பெற்றுள்ளன.

* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக கொல்கத்தா 232, மும்பை 210ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக மும்பை 108, கொல்கத்தா 67ரன் எடுத்துள்ளன.

The post பிளே ஆப் வாய்பை தக்க வைக்க கொல்கத்தாவை வெல்லுமா மும்பை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Kolkata ,IPL T20 ,Mumbai Indians ,Kolkata Knight Riders ,Hardik Pandya ,Dinakaran ,
× RELATED முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மூட்டை கட்டிய மும்பையுடன் மோதல்