×
Saravana Stores

அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம் அடையாளம் காணும் பணியை தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் தொடங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், 2018ம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ஜூன் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை மேற்கொள்ள வேண்டும். சதுப்பு நிலங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போதைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இப்பணிகளுக்காக நிபுணர்களின் சேவையை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

The post அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம் அடையாளம் காணும் பணியை தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Tamil Nadu government ,CHENNAI ,Madras High Court ,Supreme Court ,
× RELATED ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு...