- காங்கிரஸ்
- பெங்களூரு
- பாஜக
- கர்நாடக
- மாலிகையா குத்தேடார்
- ஷரதா மோகன் ஷெட்டி
- முதல் அமைச்சர்
- சித்தராமையா
- துணை முதலமைச்சர்
- டி.கே.சிவகுமார்
- தின மலர்
பெங்களூரு: கர்நாடகாவில் முன்னாள் பாஜ எம்எல்ஏக்களான மாலிக்கையா குத்தேதார் மற்றும் ஷாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரசில் சேர்ந்தனர். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் பாஜவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாலிக்கையா குத்தேதார், முன்னாள் எம்எல்ஏ ஷாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் காங்கிரசில் சேர்ந்தனர்.
மாலிக்கையா குத்தேதார் அப்சல்பூர் தொகுதியில் இருந்து ஆறு முறை எம்எல்ஏவாக இருந்தவர்.2 முறை எம்பியாக இருந்தார். னால் 2019 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார். சாரதா மோகன் ஷெட்டி 2013 முதல் 2018 வரை உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கும்டாவிலிருந்து காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தார். 2018 சட்டமன்றத் தேர்தலில் டிக்கெட் மறுக்கப்பட்டதால் பாஜவுக்கு சென்றார்.
The post கர்நாடக மாஜி பாஜ எம்எல்ஏக்கள் 2 பேர் காங்கிரசில் இணைந்தனர் appeared first on Dinakaran.