×

புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

 

வருசநாடு, மார்ச் 19: கடமலைக்குண்டு அருகே பாலூத்து ஊராட்சிக்கு உட்பட்ட தேவராஜ்நகர் கிராமத்தில் ரேஷன் கடை பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர், இதனை தொடர்ந்து க. மயிலாடும்பாறை ஒன்றிய குழு துணை சேர்மன் சேகரன் பொது நிதியிலிருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணியில் முதற்கட்டமாக களமிறங்கினர், ஒன்றிய குழு தலைவர் சித்ரா சுரேஷ், ஒன்றிய குழு துணை தலைவர் சேகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா உதயகுமார், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த சாலை சில மாதங்களுக்கு முன்பு மழை நீர் தேங்கி மிகவும் குண்டும் குழியுமாக இருந்தது. இதுகுறித்து ஒன்றிய குழு துணை தலைவர் சேகரனிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து ரூ.3 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இதனால் அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பணியியை ஒன்றிய பொறியாளர்கள், ராமமூர்த்தி, தொழில்நுட்ப உதவியாளர்கள் ராஜேஷ், ஜாய்பிரகாஷ், அழகுராஜா, மயிலாடும்பாறை யூனியன் துணை சேர்மன் சேகரன், பாலூத்து ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாலு, அரசு ஒப்பந்ததாரர் ஜெயக்கொடி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Devarajnagar ,Baluthu panchayat ,Kadamalaikundu ,Mayilatumparai ,Dinakaran ,
× RELATED விவசாயத்துக்கும், குடிநீருக்கும்...