×

விசாரணை ஏஜென்சிகளால் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி எதிரிகளே இல்லாத தேர்தலை எதிர்கொள்வது பாஜ குறிக்கோள்: எஸ்டிபிஐ கடும் கண்டனம்

சென்னை: அரசின் விசாரணை ஏஜென்சிகளால் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி எதிரிகள் இல்லாத தேர்தலை எதிர்கொள்வது தான் பாஜவின் குறிக்கோள் என்று எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே வெளியிட்ட அறிக்கை: ஜார்க்கண்ட் முக்தி மோட்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது, வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் சங்பரிவாரின் சமீபத்திய திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் சட்டத்தை மீறுபவர்கள் மீது கட்சிகளைக் கடந்து வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், கட்சி விசுவாசத்தின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு அரசின் விசாரணை ஏஜென்சிகளால் இரட்டை நிலை சிகிச்சை அளிக்கப்படுவது கவலையை ஏற்படுத்துகிறது. எதிர்க் குரல்களை மிரட்டி மவுனமாக்கும் ஆளுங்கட்சியின் கருவியாக மத்திய விசாரணை அமைப்புகள் மாறி வெகு நாட்களாகிவிட்டது. எதிரிகள் இல்லாத தேர்தல் போட்டி ஜனநாயகம் அல்ல; அது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post விசாரணை ஏஜென்சிகளால் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி எதிரிகளே இல்லாத தேர்தலை எதிர்கொள்வது பாஜ குறிக்கோள்: எஸ்டிபிஐ கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,STBI ,CHENNAI ,All ,India General Secretary of ,Ilyas Thumpe ,Jharkhand ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை தேயிலைத் தோட்ட...