×

தேனி மாவட்ட திமுக சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி: தேனி, சின்னமனூரில் நடந்தது

தேனி/சின்னமனூர், ஜன.14: தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று தேனியில் நடந்தது. தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தேனி நகரில் உள்ள என்.ஆர்.டி திருமண மண்டபத்தில் நேற்று சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் முன்னிலை வகித்தார். தேனி நகர செயலாளர் நாராயணபாண்டியன் வரவேற்றார். இப்பயிற்சி வகுப்பில் தேனி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப்பிரிவு, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தேனி மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது, சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் பரிமாற்றம், அதன் தாக்கங்கள் குறித்தும், இதனை திமுகவினர் எதிர்கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் காணொலி மூலம் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் செல்லப்பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் திருக்கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் தேனி வடக்கு சக்கரவர்த்தி, பெரியகுளம் பாண்டியன், சின்னமனூர் முருகேசன், பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப்கான், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் டாக்டர்.வி.ஆர்.ராஜன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல்ராஜசேகர், மாவட்ட சிறுபான்மை பிரிவு அணி அமைப்பாளர் ஷேக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். * சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப தெற்கு மாவட்ட அளவிலான பயிற்சி பட்டறை முகாம் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம் எம்எல்ஏவுமான ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், தேனி தெற்கு மாவட்ட திமுக அவை தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஊடக பயிற்சி பட்டறை வகுப்பில் இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, தொண்டரணி, தொழிலாளரணி, வழக்கறிஞரணி, பொறியாளரணி, மருத்துவரணி, விளையாட்டு அணி, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி மற்றும் கழக சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.சென்னை தலைமையிலிருந்து ஆன்லைன் மூலமாக பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்டவைகளை ஆண்ட்ராய்டில் கையாளுவது எப்படி, அறிவியல் முன்னேற்றத்தின் பல்வேறு தகவல் தொழில் நுட்பங்களை கொண்டு செல்வதற்கு வசதியாக எளிதாக பொதுமக்களிடம் சேர்ப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி பட்டறையில் தேனி மாவட்ட தெற்கு திமுக சார்பில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

The post தேனி மாவட்ட திமுக சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி: தேனி, சின்னமனூரில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Theni District DMK ,Chinnamanur ,Theni ,Theni North District DMK ,NRT Marriage Hall ,Theni Nagar ,Dinakaran ,
× RELATED தேனி மக்களவை தொகுதியில் வாக்கு...