×

கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கும் ஒன்றிய அரசு அமைய வேண்டும்: வைகோ அறிக்கை

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை: 2023ன் கடைசி மாதங்களில் இயற்கையின் கோர தாண்டவம் தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது. இந்திய உபகண்டத்திற்கே வழிகாட்டக் கூடிய திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்து வருகிறது. ஒன்றிய பாஜ அரசு இந்துத்துவா சக்திகளின் எடுபிடியாக ஆட்சி நடத்துகிறது. கடந்த ஆண்டு காஷ்மீரைப் பலியிட்டார்கள்.

மதச்சார்பற்ற நாடு என்ற கோட்பாட்டினைச் சிதைத்து, இந்துத்துவாவின் நச்சுக் கருத்துக்களை சட்டங்களாக்க ஒன்றிய பா.ஜ. அரசு முனைகிறது. 2024 மே மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. திமுக முன்னணியில் நின்று ஏற்படுத்தியுள்ள ‘இந்தியா’ கூட்டணி புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயகம் வழங்கியுள்ள வலிமையான ஆயுதமான வாக்குச் சீட்டை பணத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் பலியாக்கிடாமலும், வாக்குச் சாவடிகளுக்கு வராமல் ஒதுங்கிக் கொள்ளும் தவறுக்கு இடம் கொடுக்காமலும் மக்கள் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும்.

திமுக தலைமையில் தமிழகத்தில் உள்ள இடதுசாரி ஜனநாயக சக்திகள் முனைந்து நின்று இந்தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாக்கின்ற அரசாக ஒன்றிய அரசு அமைய வேண்டும், ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசை இந்தியா கூட்டணி அமைக்கும் என்ற நிலையை உருவாக்க நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

The post கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கும் ஒன்றிய அரசு அமைய வேண்டும்: வைகோ அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Union Government ,Vigo ,CHENNAI ,Madhyamik ,General Secretary ,Vaiko ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...