- ஐயப்பன்
- அலகாப்பெருமாள் கோயில்
- பொன்னமராவதி
- பட்டமராதன் அய்யப்பா
- பொன்னமராவதி அலகாப்பெருமாள் கோயில்
- அய்யப்பன் கோயில்
பொன்னமராவதி, டிச.31: பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் பட்டமரத்தான் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி பஜனை நடைபெற்றது.பொன்னமராவதி பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஒன்று கூடி வருடந்தோறும் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம் இதேபோல இந்தாண்டு ஒன்று கூடி குருசாமி ரமேஷ் தலைமையில் இருமுடி கட்டி பஜனை பாடி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. இதில் 200க்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு பயணம் சென்றனர். இதில் ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
The post அழகப்பெருமாள் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி பஜனை appeared first on Dinakaran.