×

நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிப்பு

நெல்லை: நெல்லை வழியாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில்-தாம்பரம் இடையே அதிவிரைவு வாராந்திர ரயில் நெல்லை வழியாக தற்போது ஞாயிறு தோறும் இயக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்று கிழமை இயக்கப்படுவதால் இந்த ரயிலை தென்மாவட்ட மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்கிறது. இந்நிலையில் இந்த ரயிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில்- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்.06011) வரும் அக்டோபர் 1, 8,15,22,29 ஆகிய தேதிகளில் ஞாயிறு தோறும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் காலை 4.10 மணிக்கு தாம்பரம் போய் சேரும்.

மறுமார்க்கமாக தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில்(எண்.06011) வரும் அக்டோபர் 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் திங்கள் கிழமை தோறும் காலை 8.05 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு, அன்று இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் தொடங்கி நடந்து வருகின்றன.

The post நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagarkovil ,Thambaram ,Tabbar ,Nagarko ,Thambaram Express Train ,Dinakaran ,
× RELATED சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு...