×

எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பெங்களூரு பயணம்: சோனியா காந்தியின் விருந்திலும் பங்கேற்கிறார்

சென்னை: எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை பெங்களூருக்கு புறப்பட்டு செல்கிறார். சோனியா காந்தி அளிக்கும் விருந்திலும் அவர் பங்கேற்கிறார். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது.

பிரதமர் மோடிக்கு எதிராக அணி திரளும் வகையில், பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 23ம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது. அப்போது அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதன் 2-வது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நாளை நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடக்கும் 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க இப்போது 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வரும் தலைவர்களுக்கு சோனியா காந்தி நாளை விருந்து அளிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து நாளை மறுதினம், எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை காலை பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.

சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் அவர் பெங்களூரில் தங்கி இருந்து நாளை மறுநாள் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

The post எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பெங்களூரு பயணம்: சோனியா காந்தியின் விருந்திலும் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chief President of the CM ,Opposition Leaders' Consultation Meeting ,G.K. Stalin ,Bangalore ,Sonia ,Gandhy ,Chennai ,Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief Chief of Opposition Leaders ,Sonia Gandhi ,Principal ,B.C. ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...