×

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது சரியே : குஜராத் நீதிமன்றம் அதிரடி!

அகமதாபாத் : அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு, ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.2019ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,’ எப்படி அனைத்து திருடர்களும் பொதுவான பெயராக மோடியை வைத்திருக்கிறார்கள்?’ என்று பேசினார். இதை எதிர்த்து குஜராத் மாநிலத்தில் சூரத் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பா.ஜ எம்எல்ஏவுமான பர்னேஷ் ேமாடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் 23ம் தேதி ராகுல்காந்திக்கு 2ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது எம்பி பதவியை பறித்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை நீதிபதி ஹேமந்த் பிரச்சக் விசாரித்தார். வழக்கின் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று காலை 11 மணிக்கு வழங்கப்பட்டது. நீதிபதி ஹேமந்த் பிரச்சக் வழங்கியுள்ள தீர்ப்பில், “சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது, அதில் தலையிட முடியாது.ராகுல் காந்தி மீது குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. ராகுல் காந்திக்கு எந்த இடைக்கால நிவாரணமும் இல்லை. அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்,”என்று தெரிவிக்கப்பட்டது.

குஜராத் உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க முடியாது.இதனிடையே குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

 

The post மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது சரியே : குஜராத் நீதிமன்றம் அதிரடி! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhy ,Modi ,Gujarat Court Action ,Ahmedabad ,Rahul Gandhi ,Surat court ,Dinakaran ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...