×

தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால் ஆன்லைன் ஷாப்பிங்கை ஊக்குவிக்க வேண்டும்! மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்த நாட்களில் வருவதால் கொரோனா பரவலை தடுக்க ஆன்லைன் ஷாப்பிங்கை ஊக்குவிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி உள்ளது. ரஷ்யா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும்  அதிகரித்து வருவதால், இந்த நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டும், ஊரடங்கு  கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி, ஈத் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில், ‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் வெளியிடப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். பண்டிகை காலம் என்பதால் ஒரே இடத்தில் மக்கள் அதிகம் கூடுதவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங்கை ஊக்குவிக்க வேண்டும். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும். பண்டிகைகளின் போது கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாவட்ட அளவில் 5 சதவீதத்திற்கு மேல் பாசிடிவ் ரிசல் வந்தால், அப்பகுதியை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாநில அரசுகள் போதிய முன்னறிவிப்புகளை வெளியிட வேண்டும். மால்கள், உள்ளூர் சந்தைகள், வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, தடுப்பூசி, தடுப்பு நடவடிக்கை ஆகிய ஐந்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா பாதிப்புகளின் ஏற்ற தாழ்வுகளை மாவட்ட அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்….

The post தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால் ஆன்லைன் ஷாப்பிங்கை ஊக்குவிக்க வேண்டும்! மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : diwali ,Union Government ,New Delhi ,Deepavali ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...