×

திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா

பாப்பாரப்பட்டி, மார்ச் 28:  பாப்பாரப்பட்டி அடுத்த பல்லூர்பேட்டை திரவுபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா, கடந்த 24ம்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. நேற்று சிறப்பு யாகம், தொடர்ந்து காலை 10 மணிக்கு கோயில் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பாப்பாரப்பட்டி கீழ் பஸ் நிலையம் நகர டெம்போ டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலசங்கம் சார்பாக, பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.

Tags : Kumbabhishekha Peru Festival ,Livupithyamman ,Temple ,
× RELATED சிங்கப்பெருமாள் கோவிலில் நரசிம்ம பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்