- இமானுவேல்
- சேகரன் சிலை
- பரமக்குடி
- சென்னை
- இமானுவேல் சேகரன்
- கே. ஸ்டாலின்
- இம்மானுவேல் சேகரனார்
- ராமநாதபுரம் மாவட்டம்
சென்னை: பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் உருவ சிலையுடன் கூடிய அரங்கத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் சமூக பங்களிப்பினை போற்றும் வகையில் அவரது நூற்றாண்டினையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உருவச்சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை இன்று 12 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்பிக்கவுள்ளார்.
