×

நெருங்கும் பொங்கல் பண்டிகை.. தங்கம் விலை வரலாற்று உச்சம்.. பவுன் ரூ.1,06,240-க்கு விற்பனை: வெள்ளியும் கிலோவுக்கு 15 ஆயிரம் அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை ஏற்றம் என்பது கடந்த ஆண்டில் அதிரடியாக இருந்து வந்தது. தொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. 9ம் தேதி அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,400க்கு விற்பனையானது.

10ம் தேதி வாரத்தின் இறுதி நாளன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,900க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 200க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.7,000 அதிகரித்து, பார் வெள்ளி ரூ.2,75,000க்கு விற்பனையானது. அதே போல், 12ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120க்கும், பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.287க்கும், கிலோவுக்கு ரூ.12 ஆயிரம் அதிகரித்து பார் வெள்ளி 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நேற்றும் மேலும் அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,05,360 என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் இன்று காலை, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,240-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.307க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 15,000 விலை உயர்ந்து ரூ.3,07,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Pongal festival ,Chennai ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...