×

லாட்டரி விற்றவர் கைது

 

திருச்சி, ஜன.14: திருச்சி வயலூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் ஜன.12ம் தேதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வயலூர் சாலை குமரன் நகர் பஸ்ஸ்டாப் அருகே லாட்டரி விற்ற வயலூா் சாலை சோமரசன் பேட்டை மல்லியம்பத்து பகுதியைச் சேர்ந்த தனசேகர்(43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சம்மந்தமான பேப்பர், ரூ.3000 பணம், 1 செல்போன், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட் ஜாமினில் விடுவித்தனர்.

Tags : Trichy ,Vayalur ,Kumaran Nagar ,Vayalur Road ,
× RELATED மின்கசிவால் மின்சாதனங்கள் தீயில் நாசம்