- டிரம்ப்
- வெனிசுலா
- வாஷிங்டன்
- எங்களுக்கு
- ஜனாதிபதி
- டொனால்டு டிரம்ப்
- விக்கிபீடியா
- ஐக்கிய மாநிலங்கள்
- நிக்கோலா மடுரோ
- சிலியா புளோரஸ்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது TRUTH SOCIAL தளத்தில், எடிட் செய்யப்பட்ட விக்கிப்பீடியா தகவலை வெளியிட்டு, தன்னை “வெனிசுலாவின் செயல் அதிபர்” என்று அறிவித்துள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீவிர சர்வதேச சர்ச்சைகளுக்கு மத்தியில் டிரம்ப் இந்தக் பதிவை வெளியிட்டுள்ளார்.
நிர்வாகத் தொடர்ச்சியைப் பராமரிக்கவும் தேசிய நிறுவனங்களைப் பாதுகாக்கவும், வெனிசுலா உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டக் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி, மதுரோ நீக்கப்பட்ட பிறகு துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை தற்காலிக அதிபர் பதவியை ஏற்க உத்தரவிட்டது.
ஜனவரி 3 அன்று வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி வெனிசுலா அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, டிரம்ப் ஒரு செய்தியாளர் சந்திப்பில், இந்த மாற்றத்தின் போது, எண்ணெய் வர்த்தகத்தை மீண்டும் தொடங்க அமெரிக்கா வெனிசுலாவை நடத்தும் என்று கூறினார். ஜனவரி 4, ஞாயிற்றுக்கிழமை அன்று, வெனிசுலாவின் பொறுப்பில் அமெரிக்கா இருப்பதாக அவர் அறிவித்தார்.
