- வேலம்மாள் அறிவு பூங்கா
- பொன்னேரி
- இஸ்ரோ
- திருவள்ளூர்
- எம்.வி.முத்து ராமலிங்கம்
- இயக்குனர்கள்
- எம்.வி.எம். சசிகுமார்
- கீதாஞ்சலி சசிகுமார்
- பஞ்செட்டி
திருவள்ளூர், ஜன.12: பொன்னேரி அடுத்த, பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் நாலேஜ் பார்க்கில், கல்வி குழுமங்களின் தலைவர் எம்.வி.முத்து ராமலிங்கம், இயக்குநர்கள் எம்.வி.எம்.சசிகுமார், கீதாஞ்சலி சசிகுமார் ஆகியோரின் வழிகாட்டுதல்படி \\”வடிவா டெக் மற்றும் டிசைன் பெஸ்ட் -26\\” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை டாக்டர் ஏ.சிவதானு பிள்ளை, இஸ்ரோவின் முன்னாள் இணை இயக்குநர் ஆர்.துரை ராஜ், இஸ்ரோவின் விஞ்ஞானி மற்றும் திட்ட மேலாளர் டி.கோகுல், ஜோஹோ கார்ப்பரேஷன் மேனேஜ் இன்ஜின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு, வடிவா டெக் மற்றும் டிசைன் பெஸ்ட்-26ரை பார்வையிட்டு புதுமை, தலைமைத்துவம், தொழில்நுட்பம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை குறித்த தங்களின் அனுபவங்களையும், நுண்ணறிவுகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
பிறகு, இணை இயக்குநர் சுரேகா ஷியாம், விழாவின் நோக்கங்களை விளக்கி, அனைத்து வளாகங்களிலும் மாணவர்கள் மேற்கொண்ட உற்சாகமான தயாரிப்புகளை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில், மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
