×

வங்கதேசத்தை தொடர்ந்து பாகிஸ்தானிலும் இந்து இளைஞர் படுகொலை: சிந்து மாகாணத்தில் மக்கள் போராட்டம்

இஸ்லாமாபாத்: வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானிலும் இந்து இளைஞர் படுகொலை செய்யப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள படின் நகரில் ஒரு நில உரிமையாளரால் இளம் இந்து விவசாயி ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு போராட்டங்கள் வெடித்தன.

படின் நகரில் வசித்து வந்த கைலாஷ் கோலி என்ற இந்து விவசாயி தனது நிலத்தில் ஒரு குடிசை கட்டியதற்காக, செல்வாக்கு மிக்க நில உரிமையாளரான சர்பராஸ் நிசாமனியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கைலாஷ் கோலியின் கொலையை தொடர்ந்து, சிந்து மாகாணத்தில் வசிக்கும் இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் படின்-ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலை மற்றும் படின்-தார் நிலக்கரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோலியின் கொலைக்கு நீதி கோரியும், குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டதால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் பல மணி நேரம் சிக்கித் தவித்தன. பாகிஸ்தான் தராவர் இத்தேஹாதின் தலைவர் சிவா கச்சி இந்த மறியல் போராட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

* வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் அடித்து விஷம் கொடுத்து கொலை
வங்கதேசத்தில் தொடர்ச்சியாக இந்துக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மற்றொரு இந்து இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.சுனாம்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஜாய் மஹபோத்ரா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உள்ளூரை சேர்ந்தவர்கள் இவரை அடித்து விஷம் கொடுத்து கொலைசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags : HINDU ,PAKISTAN ,PROVINCE ,Islamabad ,Bangladesh ,Batin ,Sindh ,
× RELATED அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்;...