×

வேலூரில் தினகரன் – விஐடி இணைந்து நடத்தும் மாணவ, மாணவிகளின் வெற்றிக்கு வழிகாட்டும் ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சி தொடங்கியது!

வேலூர் தினகரன் – விஐடி இணை ணைந்து நடத்தும் வெற்றி நமதே பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பொதுத்தேர்வில் எளிய முறையில் முழு மதிப்பெண் பெறுவது குறித்து கல்வியாளர்கள் அரிய கருத்துரைகள் வழங்க உள்ளனர்.

தமிழகத்தின் நம்பர் 1 நாளிதழான தினகரனும், சர்வதேச அரங்கில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ள வேலூர் விஐடி பல்கைலைக்கழகமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு தேர்வினை எப்படி எதிர்கொள்வது என்று வழிகாட்டும் வகையில், கல்வி தொடர்பான ‘வெற்றி நமதே’ நிகழ்ச் சியை நடத்தி வருகின்றன.

இதன் மூலம் பல லட் சக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை பிடித்ததுடன் தங்கள் வாழ்வில் தடம் பதித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடும் கனவுகளோடும் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வரு கின்றனர்.

அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை ஒரே இடத்தில் ஒவ்வொரு பாடங்கள் வாரியாக தனித்தனியாக அறிந்து கொள்ளும் வகையில் வேலூர் தினகரன் நாளிதழும் வேலூர் விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து பிரமாண்ட ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியை வேலூர் விஐடி பல்கலைக்கழகம் அண்ணா அரங்கில் இன்று (10ம் தேதி) நடத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு அனுமதி இலவசமாகும். பிளஸ் 2 மாணவர்களுக்கு எந்த பாடத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் எளிய முறையில் அதனை
எப்படி படிப்பது முழு மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? என்று கருத்துரையாளர்கள் டிப்ஸ் அளிக்க உள்ளனர். அது மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதி முடித்தவுடன் எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் எதிர்காலத்தில் நல்ல சம்பளமும் என்பது உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை வல்லுனர்கள் வழங்குகின்றனர். அதோடு மாணவர்கள் கேட்கும் பாடம் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க உள்ளனர்.

வெற்றி நமதே கல்வி நிகழ்ச்சி மாணவ, மாணவிகள் தெளிவான முடிவுகள் எடுக்க மிகவும் உதவியாக இருக்கும். பிளஸ் 2 மாணவர்களின் லட்சியப்பாதைக்கு படிக்கற்களாய் தினகரன் மற் றும் விஐடி இணைந்து வழங்கும் வெற்றி நமதே என்ற இந்நிகழ்ச்சி இருக் கும் என்பது நிச்சயம்.

ஆகவே தங்களது கல்வி கனவினை நனவாக்கி, சிறந்த எதிர்காலத்திற்கும் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை அடையவும் துணை நிற்கும் ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியை மாண வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை வேலூர் தினகரன், விஐடி பல்க லைக்கழகம் இணைந்து செய்துள்ளது. ரேடியோ பார்ட்னராக வேலூர் சூரியன் எப்எம் 93.9 உள்ளது.

Tags : Vellore ,Dinakaran ,VID ,Vithi Namade Plus 2 ,Viet Namade Plus ,
× RELATED ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை...