×

உலகம் உங்கள் கையில் திட்டத்தில் 296 மாணவர்களுக்கு மடிக்கணினி

அந்தியூர், ஜன. 8: அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசு சார்பில்  ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இறுதி ஆண்டு கல்வி பயிலும் மாணவ, மாணவியர் 296 பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் செந்திலரசு, இயக்குனர் முத்துசாமி முன்னிலையில் எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், விவசாய அணி மாவட்டத் துணை அமைப்பாளர் விவேகம் பாலுசாமி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரகாஷ், மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Anthiyur ,Tamil Nadu government ,Appakudal Shakti Polytechnic College ,
× RELATED கோபி அருகே கஞ்சா விற்ற பெண் குண்டாசில் அடைப்பு