×

வரத்து குறைந்ததால் விலை உயர்வு வஞ்சிரம் கிலோ ரூ.1300க்கு விற்பனை

 

ஈரோடு, ஜன.5: ஈரோடு மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த தலா 11 கிலோ எடை கொண்ட 7 வஞ்சிரம் மீனை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு நேற்று தூத்துக்குடி, கடலுார், ராமநாதபுரம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் இருந்து ஐந்து டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது. வழக்கமாக 7.5 டன் மீன்கள் வரத்தாகும். ஆனால், கிறிஸ்துமஸ் காரணமாக படகுகள் அதிகம் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாததால் வரத்து குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், மார்க்கெட்டிற்கு தலா 11 கிலோ எடை கொண்ட 7 வஞ்சிரம் மீன்கள் வரத்தானது. கிலோ ரூ.1,300க்கு விற்றது.கடந்த வாரம் ரூ.750க்கு மட்டுமே விற்றது. இதேபோன்று, கடந்த வாரம் ரூ.200க்கு விற்ற மத்தி மீன் ரூ.300க்கு விற்றது. மீன்கள் விலை விபரம் கிலோவில்: கருப்பு வாவல் ரூ.800, கடல் அவுரி ரூ.700, முரல் ரூ.450, கடல் பாறை ரூ.500, கனவா ரூ.500, சங்கரா ரூ.400, வெள்ளை வாவல் ரூ.900, மயில் மீன் ரூ.500, விளமீன் ரூ.500, இறால் ரூ.650, திருக்கை ரூ.450, கொடுவா ரூ.750, அயிலை ரூ.250க்கு விற்பனையானது.

Tags : Erode ,fish market ,Erode Stony Bridge Fish Market ,Thoothukudi, ,Kadalur ,Ramanathapuram, Puducherry ,
× RELATED வணிக ரீதியிலான இயந்திரம் வாங்க பெண்களுக்கு 50 சதவீதம் மானியம்