×

ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர்கள், எம்பி-எம்எல்ஏக்கள் வாழ்த்து

சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் திமுகவினர், பொதுமக்களும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஆங்கில புத்தாண்டையொட்டி திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து வாழ்த்து ெதரிவித்தார்.

இதே போல பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, வெள்ளக்கோவில் சாமிநாதன், அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், வழக்கறிஞர் வில்சன், கிரிராஜன் உள்ளிட்ட எம்பிக்கள், தாயகம் கவி, இ.பரந்தாமன், ஆர்.டி.சேகர், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, ஜெ.கருணாநிதி, க.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி உள்ளிட்ட எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பி ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.கே.சித்திக் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதே போன்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார், விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல் ராஜன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் திமுக ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சியினர் திரண்டதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இபோன்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதே போல கட்சியினரும், பொதுமக்களும் முதல்வா மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க திரண்டதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லம் மக்கள் ெவள்ளமாக காட்சியளித்தது.

Tags : English New Year's Eve ,K. Ministers ,Stalin ,Chennai ,K. Stalin ,English New Year ,Chief Minister of ,Tamil ,Nadu ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...