- குண்டஸில்
- பரமக்குடி
- உட்கோதம்
- பரமகுடி செங்குப்தா தெரு
- கார்த்திகேயன்
- பரமக்குடி காந்திஜி ரோட் வினோத்
- 25
- விஸ்வா
- வன்னிமரத் தெரு
- சிவன்
பரமக்குடி,டிச.31:பரமக்குடி உட்கோட்டம் பரமக்குடி செங்குப்தா தெருவில் கடந்த நவ.11ம் தேதி கார்த்திகேயன் (25) என்பவரை, பரமக்குடி காந்திஜி ரோடு வினோத் (25), வன்னிமரத் தெருவைச் சேர்ந்த விஸ்வா (25), மற்றும் சிவகுரு(25) ஆகிய மூவரும் சேர்ந்து கொலை செய்தனர். இது தொடர்பாக பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் வினோத் மீது கொலை வழக்கு, வன்கொடுமை தடுப்பு, கொலை மிரட்டல் வழக்குகள், அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளது. மேலும் வினோத்தின் பெயர் ரவுடி லிஸ்டில் உள்ளதால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
