×

கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் மா.செ. மயங்கி விழுந்ததால் பரபரப்பு

 

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் மா.செ. மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எடப்பாடியின் அருகே பிரச்சார பேருந்தில் நின்றிருந்த மா.செ. சிறுனியம் பலராமன் திடீரென்று மயங்கி விழுந்தார். மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் மயங்கி விழுந்தபோதும் எடப்பாடி பேசிக் கொண்டே இருந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. மயங்கி சரிந்த சிறுனியம் பலராமனை முன்னாள் அமைச்சர் ரமணா பேருந்துக்குள் அழைத்துச் சென்றார். பேருந்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த சிறுனியம் பலராமன், பரப்புரை முடிவில் எடப்பாடிக்கு வீரவாள் வழங்கினார்

Tags : Edappadi ,Palanisami Parapuram ,Kawarappetta ,Kummidipundi Ce ,PALANISAMI PARAPPURA ,KAWARAPETTA ,Edapadi ,Ce ,Srinyam Balaraman ,District Secretary ,
× RELATED திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு...