×

தெற்கு மெக்சிகோவில் இன்டர்ஓசியானிக் ரயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 13 பேர் உயிரிழப்பு; 36 பேர் படுகாயம்

மெக்சிகோ: தெற்கு மெக்சிகோவின் ஓக்ஸாக்காவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்ஸாக்கா வழியாக 241 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த இன்டர்ஓசியானிக் ரயில் நிஸாண்டா நகரம் அருகே தடம்புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது. விபத்தில் சிக்கிய 193 பேரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். மேலும் 98 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 36 பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Interoceanic ,southern Mexico ,Mexico ,Oaxaca, southern Mexico ,Oaxaca ,Tadamburandu Gorge ,Nisanta ,
× RELATED வரலாற்று சிறப்போடு நிறைந்த கலாசாரம்...