கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கடைசியாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்ட 2002ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலின் பிடிஎப் பதிப்பை சிஎஸ்வி வடிவத்திற்கு முழுமையாக மாற்றாததால் தற்போதைய பல வாக்காளர்களை 2002 பட்டியலுடன் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பிஎல்ஓக்களுக்கு வழங்கப்பட்ட செயலில், 2002 பட்டியலுடன் இணைக்கப்படாதவர்களுக்கு கணினி மூலம் தானாக நேரில் ஆஜராகி ஆவணங்கள் சமர்பிக்க சம்மன் அனுப்பப்படுகிறது. இவ்வாறு கணினி மூலம் தானாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தாலும் அவர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என மேற்கு வங்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்க தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
