×

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனை – வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனையாகிறது. இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை ஒரு பவுன் ஒரு லட்சத்து ரூ.3,120க்கு விற்பனையாகி புதிய உச்சம் கண்டது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,890க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து 3120க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனையாகிறது.

அதே போல வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.254க்கும், கிலோவுக்கு ரூ.9 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.274க்கு விற்பனையாகிறது. வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.20 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2.74 லட்சத்துக்கு விற்பனையானது.

இதனிடையே கடந்த ஜனவரி 1ம் தேதி ரூ.98ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளி விலை தற்போது ரூ.274ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி 3ம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.100ஆக உயர்ந்த நிலையில் செப்டம்பர் 24ல் ரூ.150ஆக அதிகரித்தது. ஓராண்டுக்குள் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.176 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2020 ஜனவரி 1ல் ஒரு கிராம் வெள்ளி ரூ.50 விற்பனை செய்யப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளில் 5 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

சோலார் தகடுகள் தயாரிப்பு, எலக்ட்ரிக் கார் தயாரிப்பு, 5ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், செமி கண்டக்டர் சிப்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதும், தேவைக்கும், விநியோகத்துக்கும் இடைவெளி ஏற்படுவதும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED 100 நாட்கள் திட்டத்தை முடக்கிய ஒன்றிய...