×

இசிஆர் சாலையில் டிரைவரிடம் செல்போன் பறித்த 5 பேர் சிக்கினர்

துரைப்பாக்கம், டிச.27: இசிஆர் சாலையில் கால்டாக்சி டிரைவரை தாக்கி செல்போன் பறித்த 5 பேரை போலீசார் கைது ெசய்தனர். மாதவரத்தை சேர்ந்தவர் அஜய்குமார் (22). கால் டாக்சி நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு சவாரிக்காக பாலவாக்கம் இசிஆர் சாலையோரத்தில் காருடன் நின்றிருந்தார். அப்போது அவ்வழியே ஆட்டோவில் வந்த 5 பேர், அஜய்குமாரை தாக்கி, அவரது செல்போனை பறித்து தப்பினர். புகாரின்பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், கந்தன்சாவடியை சேர்ந்த பிரதீப்குமார் (24), அரவிந்த் (25), கார்த்திக் (23), ஆனந்த் (23), அஜய் (22) ஆகிய 5 பே என தெரியவந்தது. அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : ECR Road ,Duraipakkam ,Ajaykumar ,Madhavaram ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்