×

ஒன்றிய அரசை கண்டித்து உப்பிலியபுரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

துறையூர், டிச.25: உப்பிலியபுரத்தில் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்திட சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், துணை போகும் அதிமுகவை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அண்ணா சிலை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், வடக்கு மாவட்டத் துணைச் செயலாளர் கனகராஜ், பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் வெள்ளையன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெகநாதன், முடிவில் உப்பிலியபுரம் பேரூர் கழகச் செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

 

Tags : DMK ,Uppiliyapuram ,union government ,Thuraiyur ,MLA ,Stalin Kumar ,BJP government ,Gandhiji ,AIADMK ,
× RELATED கோவில்பட்டி சாலையில் அகற்றிய வேகத்தடை மீண்டும் அமைக்க மக்கள் கோரிக்கை