டாக்கா: கடந்த ஆண்டு, வங்கதேசத பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ப்புக்கு காரணமான மாணவர் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இளைஞர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 18, 19ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. இந்து வாலிபர் ஒருவர் கும்பலால் அடித்து எரித்து கொல்லப்பட்டார். சட்டோகிராமில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரியின் இல்லத்தின் மீது கல்வீச்சு சம்பவமும் நடந்தது.
இந்நிலையில், வங்கதேசத்தில் மீண்டும் பத்தறமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சிட்டகாங்கில் இந்திய விசா விண்ணப்ப சேவைகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற 4 மையங்கள் தொடர்ந்து செயல்படுகிறது. இதற்கிடையே, சில்ஹெட் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
