×

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்திற்கு 23ம்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்கள் வரும் ஜனவரி 10ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை வழங்க மாணவர்களை தெரிவு செய்யும் பொருட்டு என்எம்எம்எஸ் தேர்வு அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வரும் ஜனவரி 10ம் ேததி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆன்லைன் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து தாம் பயிலும் பள்ளி தலைமையாசிரியரிடம் நேற்று சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் தற்போது மாணவர்களின் நலன்கருதி அதிக மாணவர்கள் பயன் பெறும் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான காலஅவகாசம் வரும் 23ம் தேி மாலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Government Elections Directorate ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...